கடலா கண்ணீரா

கடல் மீனை பறிக்க என் மக்கள் வந்தார்கள்...

ஓ!!! உன் குழந்தைகளை எடுத்துச் சென்று
விடுவார்கள் என்ற பயமோ???

இல்லை,உன் தீராப் பசிக்கு என் மக்களை
உணவாக எடுத்துக் கொண்டாயோ???

உன்னுள் எடுக்கும் உப்பும் கரைகிறது...
ஆனால் உன் மனம் மட்டும் ஏன் கரையவில்லை???

உன் அலையில் கறையில்லை...
உன் மனதில் மட்டும் ஏன் இவ்வளவு கறை???

தெய்வமாக வணங்கினார்கள் உன் பிள்ளைகள்
அவர்களை தெய்வமாக்கி விட்டாயே
இது நியாயமா???

ஆஹா!

வானத்தை தன்னுள் அடக்கி கொண்ட நீ
பூமியையும் அடக்கிக் கொள்ள அசைப்படுகிறாயோ!!!

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 9:50 am)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 52

மேலே