அப்படியே திருப்பிப்போடு 0தாரகை0

இந்தியா
மதசார்பற்ற நாடு
இது உண்மையென்றால்,
குஜராத் இந்தியாவில்தான் உள்ளதா?

கற்பழிப்புக் குற்றம் குறைய
பெண்கள்
ஆடையைக் கூட்ட வேண்டாம்
ஆண்கள்
ஆண்மையைக் குறைத்தால் போதும்.

சிறையில் தள்ள
குற்றங்கள் ஏதும்
செய்திருக்க வேண்டாம்
தொப்பியும் தாடியும்
வைத்திருந்தால் போதும்

பருவப்பெண்ணின்
மணிக்கட்டில்
முத்தங்கள் பொழிந்து
காதல் சொல்லும் கிழவன்
காமன் அல்ல.
மனித உரிமை ஆணையத்தின்
தலைவன்

பிரம்மச்சாரியின்
ஆசைக்கு
வடிகாலாய்த்
திருமணம் வேண்டாம்
சாமியாராய் மாறி
ஆசிரமம் நடத்தினால் போதும்

சட்டத்தின் முன்
அனைவரும் சமம்
ஆகையால்
கீழ்சாதி என்றொன்றில்லை
ஆனால்
மேல்சாதி உண்டு.

எழுதியவர் : தாரகை (19-Dec-13, 10:52 am)
பார்வை : 301

மேலே