மரம் மண்ட

ஒரு கிராமத்தில் ,ரெண்டு பேரு வந்து ஒருத்தன் குழி வெட்டுறான், கொஞ்சநேரம் கழிச்சு இன்னொருத்தன் அத மூடுறான்.இப்படியே செய்றத பார்த்த கிராமவாசி ஒருத்தர், தம்பி என்ன செய்றிங்க என்று கேட்க.
அவன் சொன்னான் ,ஐயா நாங்க கிரீன் கிளப் சங்கத்தில் இருந்து வரோம்.எங்க சங்கத்தில இன்னைக்கு இந்த கிராமத்தில் மரக்கன்று நடனும் சொன்னாக.மூணு பேர இந்த வேலைக்கு போட்டாங்க.நான் குழி வெட்டனும்,இன்னொருத்தன் செடிய வைக்கணும்,இவன் குழிய மூடுனும். இன்னைக்குனு பார்த்து செடி வைக்கிறவன் லீவு போட்டுட்டான்.ஆனா நாங்க எங்க கடமையா செய்யாம இருக்க முடியாது.
அதன் .....எங்க வேலைய பாக்கிறோம்.

எழுதியவர் : மகேஷ் (17-Dec-13, 11:04 pm)
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே