பல்லில்லாப் புலிகள்---அஹமது அலி----

ஆணாதிக்கத்தால்
அடி உதைபடும்
பெண்களின் அவலநிலை
ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க....!!!
0)))
பெண்ணாதிக்கத்தால்
அடி உதைபடும்
ஆண்களின் அவலநிலை
மறுபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!!
0)))
பெண்களின் அவலம்
அழுகையால் வெளியே
கசிவதுண்டு..!!!
0)))
ஆண்களின் அவலம்
சுய கெளரவத்தால் உள்ளுக்குள்
குமுறிக்கொண்டு...!!!
0)))
கொலைகாரனும்
குலை நடுங்கும்
கம்பீரத் தோற்ற காவலதிகாரியும்
கட்டிய மனைவியின்
சுட்டு விரல் அசைவிற்கு
பெட்டிப் பாம்புகளாய்....!!!
0)))
எடுப்பாக உடையணிந்து
மிடுக்காக நடைபோட்டு
எதேச்சதிகாரம் புரியும்
உயர் அதிகாரிகளும்
உற்ற துணையாளின்
உரத்த குரல்களுக்கு
ஊமைகளாய்....!!!
0)))
சட்டத்தின் சந்து பொந்துகளில்
அனாயசமாக புகுந்து விளையாடும்
சட்டம் பயின்ற வழக்குறைஞர்களும்
சதிகளின் சட்டத்தில்
வீட்டுச் சிறைகளில்
விடுதலை பெற முடியா
ஆயுள் கைதிகளாய்....!!!
0)))
கடைக்கண் பார்வை காட்டி
படு சு(கெ)ட்டி மாணவர்களையும்
பவ்யமாக மாற்றிடிடும்
கல்வி பிதாக்களாம்
ஆசிரியர்களும் அம்மணிகளிடம்
கைகட்டி வாய் பொத்தியபடி...!!!
0)))
வீரப் புலிகளாய் வெளியே
உறுமும் சில ஆண்கள்
பல்லில்லா கோழைப்
புலிகளாய் வீட்டில்...!!!
0)))
அரிவாள் கத்தி
ஏகே 47 எதற்கும்
அஞ்சாத ஆண்களுக்கும்
துடைப்பமும், பூரிக் கட்டைகளுமே
அச்சுறுத்தும் ஆயுதங்கள்...!!!
0)))
சொல்லிக் கேட்காத
கேட்டுக் கிடைக்காத
சின்னச் சின்ன விடயங்களுக்கும்
சில, பல நாட்கள்
பேசாத தண்டனைகள்
பெரும் மன உளைச்சலாக
பெரும் தண்டைகளாக...!!!
0)))
கல்லும் கணவனல்ல;
புல்லும் புருசனல்ல;
புது யுகத்தில்
புதுமைப் பெண்கள்
பண்பு தொலைக்காமல்
அன்பு வளர்க்க
இல்லம் சொர்க்கமே...!!!
................................................................

(ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி இது)
மனைவியிடம் அடி வாங்கும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், பொறியாளர்கள்,மருத்துவர்கள். போன்றவர்கள் இந்த நிலைக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் சொல்லி இருக்கிறார்கள்.
..............................................................

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (6-Jan-14, 7:28 am)
பார்வை : 308

மேலே