போகி

எல்லோருமே வெளியில்
இருக்கும் பழையதைத்தானே
எரிக்கிறார்கள்.
நாம் ஏன் உள்ளிருப்பதையும்
சேர்த்து எரிக்கக் கூடாது?
பக்கத்து வீட்டு படாடோபத்தைப்
பார்த்து ஏங்கும் ஏக்கம்:
நம்மை விட சுகமாக வாழ்பவரைப்
பார்த்து வரும் பொறாமை:
நம் கருத்து ஏற்றுக் கொள்ளப்
படாத போது வரும் கோபம்:
நம் முன்னே நிற்பவரை
ஆராயாமல் நாம் அவசரத்தில்
வீசும் கடுஞ் சொற்கள்.
இந்த வருட போகிப் பண்டிகைக்கு
இவற்றை மட்டும் எரித்து
புகை இல்லாத போகி
கொண்டாடலாமே!

எழுதியவர் : R.A.பாலசுப்ரமணியன் (12-Jan-14, 8:45 pm)
சேர்த்தது : RAபாலசுப்ரமணியன்
பார்வை : 280

மேலே