லிமரிக்கூ
பிள்ளை வாழ வியர்வையை உதிர்க்கும் தாய்
இவள் சுகவீனமுற்றால் அவளை எதிர்க்கும் சேய்
ஒளிந்தது பாசம்
வளர்ந்தது வேசம்
இப்பிள்ளை இதயமற்ற சுடுகாட்டுப் பேய்
~ * ~ * ~ * ~
அமைதியின் படுக்கையில் அரசியல் மேசை
அதனுள்ளே நடப்பது அக்கிரம பூசை
யாருக்கும் புரியாது
தடுக்கவும் முடியாது
இணைந்து எழுப்புவோம் ஒரே குரலோசை.
~ * ~ * ~ * ~
உரிமைக்காய் போராடத் தோன்றும் மனம்
போராடினால் ஆகிவிடும் உடல் பிணம்
செத்து விட்ட மனிதம்
எதிலும் இல்லை புனிதம்
மௌனியாய் இருப்பதுவே நடப்பு குணம்
~ * ~ * ~ * ~
குப்பைகளை சேகரிப்போனே பெறுகிறான் பரிசில்
கொடுமைக்காய் துணைபோகிறான் இந்த குரிசில்
கொடுக்க வேண்டும் சாட்டை
வெல்ல வேண்டும் நாட்டை
நாம் விழுந்துவிடக் கூடாது சதியோரின் தரிசில்
~ * ~ * ~ * ~
எழுத்துத் தளம் தந்துவிடும் மிக்க சந்தோசம்
எழுத்துக்களால் கலைத்துவிட்டோம் பொய்வேசம்
இன்று குழந்தைகளாய்
நாளை கவிஞர்களாய்
நாடி வரும் என்றென்றும் அசத்தலான கரகோசம்
~ * ~ * ~ * ~
********************************************************
bah-BAH bah-bah-BAH bah-bah-BAH
bah-BAH bah-bah-BAH bah-bah-BAH
bah-BAH bah-bah-BAH
bah-BAH bah-bah-BAH
bah-BAH bah-bah-BAH bah-bah-BAH
மேற்படி லிமரிக்கூ எனும் வடிவில் எழுதப் பட்ட எனது புது முயற்சிக் கவி .