ஏன்எதற்குஎன்ன எப்படி

நிலா என் வட்டமா இருக்கு ?
பௌர்ணமிம்மா
பொர்னம்மின்னா ?
புல்ல்மூன்
அப்பா நாளைக்கு வரது?
அது சின்ன மூன்
சின்னதா இருந்தது எப்படி புல்ல்மூன் ஆச்சு ?
தெனம் வரும்மா?
எப்படி?
-நம்ம அக்கா பசங்க மாமா பசங்க கேள்விகேட்க ஆரம்பிச்சா இப்டிதான் கேட்டுகிட்டே இருப்பாங்க .






பிறந்த 3 மாதத்தில் முகங்களை கவனிக்க ஆறம்பித்து -
1 வருடத்தில் சுற்றியுள்ள பொருட்களை கையாள ஆரம்பித்து -
2 வயதில் பேசப்பழகி -
3 வயதில் கவனிக்க பழகி -
4 வயதில் மொழி பற்றிய ஆற்றல் பெற்று -
7 வயதுக்குள் புத்திசாலித்தனம் கைகூடி -
8 வயதில் மனப்பாடம் பண்ணும் திறனோடு -
11 வயதிலெல்லாம் பகுத்தரிவேன்னும் அரனொடு -
முழு வளர்ச்சி பெற்று விடுகிறது குழந்தை !

இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது ?கேள்வி கேட்பதால் .

மனித வளர்சிகே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருப்பது கேள்விகேட்கும் ஞானம்தான் !

ஆகா 11 வயதிற்கு மேலும் தொடர்ந்து ஒவொரு காலத்திலும் தளத்திலும் வகுப்பறைகளிலும் கேள்வி கேட்கக் கொண்டே இருக்க வேண்டும் .
ஆசிரியர் பாடம் நடத்தும் போது தீவிரமாக கவனித்துக்கொண்டே வருகிறோம் .அப்போது திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றும் . அதுப்பற்றி ஆசிரியரிடம் உடனே கேள்வி கேட்டுக் விடையை பெற வேண்டும் .

உடனேன்னா ஆசிரியர் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது ,அந்த ஓட்டத்தை தடை செய்து அல்ல :அவர் நடத்தி முடித்ததும் கேட்க வேண்டும் . கேள்விகளைத் தெளிவாக வார்த்தையில் சுருக்கமாக கேட்க வேண்டும் .

கேள்விக் கேட்க சிலர் கூச்சப் படலாம் .கூடாது !எதற்க் கூச்சப் பட்டாலும் கேள்விக் கேட்க மட்டும் கூச்சப் படக் கூடாது .

மற்றவர்கள் நம்மை "இதுகூட தெரியாம இடுக்காம் பாரு " என்று ஏளனம் செய்வார்களே என்று சிலர் சங்கடப்படலாம் ,ஆனால் கேள்விகேட்க மட்டும் சங்கடப்படகூடாது .

கேள்வி கேட்பவன் அப்போது மட்டுமே முட்டாள் .கேள்வி கேட்காதவன் எப்போதுமே முட்டாள் ஆக
வேண்டியதுதான் .

ஆகவே ஏன்?எதற்கு?என்ன? எப்படி?எது?எதனால்?
எப்போ?என்ற கேள்விகள் எந்த விசயத்திலும் எப்போதும் எவரிடமும் கேளுங்கள் .

அப்போதுதான் உங்களுக்கு முழுவதுமான தகவல்கள் கிடைக்கும் .அதன் மூலம் தான் முழுமையான அறிவு கிடைக்கும் .










இது நான் ஏன் ஆசிரியர் எழுதிய புத்தகத்திலிருந்து நான் வாசித்த ஓர் அறிவுரை ..


*********************நன்றி****************************8

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (21-Feb-14, 4:23 pm)
பார்வை : 179

சிறந்த கட்டுரைகள்

மேலே