பெண்ணியம்

பெண்ணியமே சிறை எடுக்கவில்லை
உன்னை சித்தரிக்கப்போகிறேன்
செதுக்கவில்லை இருந்தும்
சிறப்பிக்க உள்ளேன்
கவி படிக்க கவிஜன் இல்லை
என்றாலும் காதலிக்கிறேன்

இம்மை மறுமையிலும் மறையாதது
உன் பெருமை மங்காதது உன் பெண்மை
தாயாய் சுமந்த பொழுதிலும்
தந்தையாய் வளர்த்தாய்
தாரமாய் தேற்றினாய்
தோழியாய் உயர்ற்றினாய்

தாங்கியும் கொண்டாய்
என்னை பூமிதனில்
அத்தனை பிறப்புக்களிலும்
எத்தனை பெருமைகள் உனக்கு மட்டும் பெண்ணியமே நேசிக்கவில்லை உன்னை
நான் சுவாசிக்கிறேன் கவிஜனாக இல்லை

காதலியாக உன்னை
காதலித்த காரணத்தால்
நான் கூட கவிஞ்சனாகிறேன்
கவி படிக்கும்போது
உயர் பிறப்பெடுக்கிறேன்
யுகக்காதலியாக

உலகினில் உயிர் குலத்திற்கு
நீ ஒரு தவப்புதல்வி
தங்கம் கூட தீயினில் சுடசுடத்தான்
உனதங்கம் முழுதும்
அன்பு மழைதான்
கண்களில் கனிவு கண்டேன்

மனக்கண்களில் பணிவு கண்டேன்
உள்ளத்தில் பாசம் கண்டேன்
உனதன்பினில் இறைவனைக்கண்டேன் மதிக்கப்பட வேண்டியவள்
இல்லை நீ துதிக்கப்பட வேண்டியவள்

உந்தன் புகழ்பாட வேண்டியதில்லை தினம் ஆனாலும் மனம் பாடுதே தினம்
பெண்ணியமே கவிதையாய் போகிறேன் காவியமாய் மீண்டும் வருகிறேன்
வாழ்க பெண்ணினம்
வளர்க உந்தன் கண்ணியம்

எழுதியவர் : tamillavs (2-Mar-14, 4:05 pm)
சேர்த்தது : tamillavs
Tanglish : penniam
பார்வை : 297

மேலே