ஏழை வாழ்க்கை

சிற்றின்பம் செரிந்ததடி
நம் வாழ்க்கை
சீரான நெடுஞ்சாலை
போலே...

மக(னை)ளை முன்னேற்றி
பின் உனை அமரவைத்து
நான் மிதிக்க அழைத்துச்
செல்லும் நம் மிதிவண்டி

ஆயிரம் பொன்
கொடுத்தும்
பெற முடியுமா ??
செல்வந்தன் வாழ்வில்

கஞ்சியோ, கூலோ
குடித்து வாழ்ந்தாலும்
அடுத்தவன் குறை
கூறாத வாழ்க்கை

"ஏழை வாழ்க்கை"

எழுதியவர் : எம். ஏ. அஸ்ரப் ஹான் (8-Mar-14, 12:25 am)
சேர்த்தது : Iam Achoo
Tanglish : aezhai vaazhkkai
பார்வை : 563

மேலே