நேர்கொண்ட பார்வை
புதுமைப்பெண்களே !
புரட்சி திலகங்களே...!
வரதட்சணை ஒழிந்துவிட்டது
வன்கொடுமை ஒழிக்கப்பட்டது
கற்பழிப்பு என்பதே இல்லை
காமூகர்கள் யாருமில்லை.
தனியாய் நடக்க
பயமாய் தோன்றவில்லை.
இப்படி பேசப்படும் காலம்
எப்போது வரும்..... ?
அப்போது பேசுவோம்
பெண்ணீயத்தின் பெருமையை..!
பெண் சுதந்திரம்
கேட்காதீர்கள்...!
எவரிடம் இருக்கிறது
இதனை தட்டிப்பறிக்க..!
கேட்டு பெறுவதற்கு
பெண் விடுதலையென்ன
பிச்சைப்பொருளோ?
மனநிலையை
மாற்றி பாருங்கள்
புதிய பூமியில்
தெளிவு பாதையிருக்கும்
உங்களுக்கான
புதிய விடியலை..!
உங்களுக்கான
சுதந்திரத்தை...!
தேடாதீர்கள்
உருவாக்குங்கள்.
உலக உருண்டையை
நேர்க்கொண்ட
பார்வையினாலே
வசப்படுத்துங்கள்..!
காமகாட்டேரிகளை தாக்க
கூரிய நகங்கள் போதும்
சில்மிஷ நாய்களுக்கு
கொண்டைஊசி சிகிச்சை போதும்.
பின் தொடரும் பரதேசிகளுக்கு
கால்செருப்பின் விளாசல்கள் போதும்.
தலை நிமிர்ந்து
அச்சம் தவிர்த்து
நடந்து வாருங்கள்
பதியும் உங்கள்
பாதத்தின் சுவடுகளில்
பற்றிஎரியும் ஆணாதிக்கம்..!
சுடர்விடும் பெண்ணுரிமை..!
இந்த இந்த
பெண்மையின் வீரத்தை
என்னோடு சேர்ந்து
விண்ணும் மண்ணும்
கைத்தட்டி பாராட்டும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.!!
---------------------இரா.சந்தோஷ் குமார்.

