சிறகுகள் என்பது விரிவதற்கு

சிறகுகள் என்பது விரிவதற்கு
சிந்தனை என்பது மலர்வதற்கு
உறவுகள் என்பது வளர்வதற்கு
உண்மைகள் என்பது உயர்வதற்கு....!!
காதல் என்பது கனிவதற்கு
காலம் என்பது மகிழ்வதற்கு
கருணை என்பது கொடுப்பதற்கு
கண்கள் உலகை ரசிப்பதற்கு - ஆம் - மனக்
கண்கள் உலகை ரசிப்பதற்கு....!!