படைப்பாளனின் கவலை

என்செய்வேன் நானறியேன்!
படைத்திட நான் துடித்தேன்!
படித்திடும் மனங்களும்
கருத்திட தவிர்த்திட்டால்
நெஞ்சு வெடித்திடும் போலே !

கட்டிய கோபுரத்தில்
கடவுளும் வரமறுத்தால்
கலையிழந்துதானே போகும்!
ஒட்டிய வயிறுடன்
யாசிகேட்டு வாசலில் அமர்ந்தென் பயன்!!

படித்திடும் ரசனை பொறுத்தே
படைத்திடும் ஆற்றல் கூடும்!!
எனக்காக நான் படைக்க
எதற்காக வலைத்தளம்...!!

ஆளில்லா நெடுங்காட்டில்
கட்டித்தங்கம் கொட்டித்தான் என்பயன்!
சில்லறை காசானாலும்
தேவைக்கு கிடைத்தால் தானே சந்தோசம்!!

பதினெட்டாயிரம் தாண்டியும்
பார்த்திடும் கண்கள் சிலநூறோ!!?
பரந்த உலகில் கருத்திடாது
சுருங்கிய உள்ளமோ ...!

தவறோ சரியோ சொன்னால்
என் மரமண்டைக்கு விளங்கும்!
படித்ததில் பிடித்ததை பகிர்ந்திடு !
உன் இதயத்தில் இடித்ததை கருத்திடு!!

காதலி கண்டு பதிலது
சொல்லா போனால்
துடித்திடும் மனம் போலே
தினம் தினம் தவிக்குது என் மனம்!!

எழுதியவர் : கனகரத்தினம் (19-Mar-14, 11:42 pm)
பார்வை : 128

மேலே