ஏக்கங்கள்
சில நேரங்களில்
பல ஏமாற்றங்கள்
உன்னால்.......
உன்னை காண
வரும் நேரமெல்லாம்
உன் இருக்கையில்
காலி இடங்கள்....
இருண்டதடி என் கண்கள்
உன்னை காணமல்...
இருந்தாலும் ஒரு ஆனந்தம்
என் மனதிற்குள்!!!!!!....
அவளை தான்
பார்க்க முடியவில்லை
என்றாலும்,
அவள் இருக்கையில்
அமர ஒரு
வாய்ப்பு கிடைத்ததே!
அதுவை போதும்,
ஒரு யுகங்கள்
வாழ்ந்திட,
இருந்தாலும் ,
உன்னுடன் வாழவே
என் கற்பனைகள்
துடிக்குதடி....
நீ இல்லாமல்
என் கற்பனைகள்
உயிர் அற்றதடி....
அதற்கு உயிருட்டவே
நித்தமும் ஒரு
முறையாவது
என் கண்களுக்கு
காட்சியளியடி
என் ஆசையாக.....

