இதமான சுகங்கள்

இதமான சுகங்கள்
வாழ்க்கையின் இனிமையான தருணங்கள்! சம்பவங்கள்!
ரசிக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!

இதழ் தீண்டும் சிலிர்ப்பு!
இளந்தென்றலின் உவப்பு!
மெல்லிறகு வருடும் கூச்சம்!
கண் மூடும் நொடி இருட்டு!
காதலின் அன்பு சீண்டல்!
பிஞ்சுக் குழந்தையின் கொஞ்சும் மழலை!
மெல்லிசை மேள தாள கீதங்கள்!மெய்மறக்கும் சுவை உணவு!
தேகம் இலேசாகும் தியானம்!
தன்னலம் காணா தானம்!

தரணியில்! இத்தரணியில் உண்டு உற்சாக தருணங்கள்
நம்மை உருவாக்கும் இதமான சுகங்கள்!

எழுதியவர் : கானல் நீர் (12-Jun-14, 9:44 am)
Tanglish : ITHAMANA sugangal
பார்வை : 91

மேலே