நெடு வானில் என் நிலா

பாகம் 2:

பாரிஜாதம் உன்ன நா(ன்) பரிசம் போட வந்தே(ன்),
பரிசல்காரன் போல பல்ல காட்டி நின்னே(ன்),
வெள்ளந்திய வெளிய வந்த எ(ன்) மாமா பாக்க,
வெயில் பாத்த வெள்ளரியா,
வெடுச்சு போச்சு என் உசுரு!

கூட வந்த பைய கூட,
கூற மேல ஏறிட்டான்,
வேரில்லா வேப்பம்மர(மா),
வயிறு கலங்கி நா(ன்) நின்னே(ன்)!

மூச்சு முட்ட,
ஒரு வழி(லி)யா பேசி நின்னே(ன்),
தாயில்லா என் தாமரய,அவ
அப்ப(ன்) கார எட்டிப் பாக்க,

வெரும் கால்ல நீ பெரும் கோலம்,
போட்டு நிக்க,

ஊர் பாக்க,
மீசக்கார(ன்) சிருச்ச முதல் நாளும் அது தான்!
முழு நிலாவ,
முற பேசி வந்த வெறும் வானம் நான் தான்!

-நகைச்சுவை கிராமிய நடையில் பெண்மை புகழ் தொடரும்!

எழுதியவர் : பாரி (6-Jul-14, 7:00 pm)
Tanglish : nedu vaanil en nila
பார்வை : 104

மேலே