மீண்டும் வானம்பாடி

அஹிம்சை அண்ணலே ! கொஞ்சம் திரும்பிப்பாரும்!

பாதுகைகள் பாதுகாப்பில் , கொள்கைகள் கிடப்பில்!
உந்தன் சிரிப்புகள் சிலைக்குள் சிறைவைக்கப்பட்டதால்,
அழுகைகள் வெளிவரவில்லையோ ! தடியும் தளர்ந்துவிட்டதோ!

வெடித்துச் சிரிக்கும் சிறுசுகள், வெடிமருந்தால்
வெடித்துச் சிதறின ! பதறிய நெஞ்சங்கள்
தீபாவளி சங்குசக்கரத்தில் சொக்கிப் போயின...

ஒற்றைக்காலைக் கட்டிவிட்டு ஓடவிடும் சமூகம்
நம்பி வாழ்வைத் தொலைத்த குடிமகனே!
வந்தது அனைத்தும் ஒத்து வாழ்ந்தால்
உன் ஒத்துழையாமை இயக்கம் எப்போது?
கறைகொண்ட மனங்களை களையெடுப்பது எப்போது?
நல்ல உள்ளங்கள் நாட்டில் நலிந்திட்டனவோ..
இல்லை இல்லை விலை மலிந்திட்டனவோ!

நன்மை தாண்டவமாடும் நல்லுலகம் மலர
அண்ணலே! மீண்டும் வானம்பாடியாய் வாராயோ!!

எழுதியவர் : Hemaprabha (6-Jul-14, 6:27 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 117

மேலே