நெடு வானில் என் நிலா
ஒரு வேல உல வெக்க,
உழவு ஓட்ட போன நானு,
கருவேல(ன்) காட்டுக்குள்ள,
தண்ணி சுமக்க உன்ன பாத்தேன்!
அந்த புழுதி படுஞ்ச சேலையிலும்,
நீ தெருஞ்ச காம்பில்லா தாழம் பூவா,
தண்ணிக் கேட்டு நா(ன்) உன்ன மரிக்க,
தவளப் போல நீ குதிக்க,
தலப்பாக் கட்டி வந்து (உன்) அப்பா நிக்க,
கானக பூமி கூடக்,கலவரமா மாறிப் போச்சு,
தானே புயல் அடுச்ச,
தாழம் பூவா உன் முகம் மாறிப்போச்சு!
- நகைச்சுவை கிராமிய நடையில் பெண்மை புகழ் தொடரும்...

