என் நண்பர்களுக்கு

நான் இவன்..
நீ அவன்..
என்ற
ஜாதி கடந்தது
நட்பு

நான் உள்ளவன்
நீ இல்லாதவன்
என்ற பாகுபாடு
கடந்தது நட்பு

நீ அதைச் செய்
நான் இதைச் செய்கிறேன்
என்று
எதிர்பார்க்காதது
நட்பு

உதடு திறந்து
கேட்டிலும்
உதறிச் செல்லும்
உறவுகள் மத்தியில்
வெரும் உணர்வறிந்து
உதவிடும் நட்பு

நட்புக் காவியம்
பல இருந்தாலும்
அவரவர் நண்பர்களைப்
போல் எவரும் இலர்

நம் நட்பு
காகிதத்தில் காவியம்
ஆகாவிடிலும்
என் மனதினில்
என்றும் அது
நிஜவோவியம்

எழுதியவர் : ராம் (3-Aug-14, 3:24 pm)
Tanglish : en nanparkalukku
பார்வை : 2779

மேலே