நட்பே கிரகமாய்

இளஞ்சூரிய நண்பனின் நட்பு
சூரிய சக்தியாய் பசுமை காக்கும்
ஒரு நேரம் சூரியனாய் சுட்டாலும்
மறு நேரம் சந்திரனாய் தனிப்பான்
குளிர்விப்பான் மகிழ்ச்சியாய்
சூரியனும் சந்திரனும் பூமி மீது கொண்ட நட்பு ஈர்ப்பால்
ஒருவருக்கொருவர் மாறி மாறி
வலம் வருகின்றனர்
அதே போல்
ஆணும் பெண்ணம் நட்பு ஈர்ப்பால்
தாரளமாய் சுற்றுகின்றனர்
தடம் புரண்டால்
இயற்கை சீறறம் தான்
குடும்பத்தில் சுனாமியாய் பூகம்பமாய்
அரைகுரை மனம் கொண்ட நண்பன்
சூரியனை பார்த்து குறைக்கும் நாய்
அரை வினாடி கூட பிரியா
மணம் கொண்ட நண்பன்
சந்திரனாய் காக்கும் தாய்
ஆத்திரக்கார அறைகுறை மனம் கொண்ட நண்பனும்
நன்றி உள்ளவன் தான்
அம்மாவசை கருப்பாய்
பௌர்னமி சிகப்பாய்
பேதம் இல்லாமல்
பேணி காக்கும் நட்பு
இவன் ஒரு தேசம்
அவன் ஒரு தேசம்
இருவரும் இணைவது சந்தோச்தில்
நட்பு இல்லா உலகம்
சூரியன் சந்திரன் இல்லா அம்மாவசை இருளில்
நிகழும் கலகம்