நம் தாய்த்திரு நாடு

தேசம் நல்ல தேசம்
நம் இந்திய தேசம்
உலகம் அதனைப் பேசும் -நம்மை
வியந்தே மகிழ்ந்து பாடும்

நம் தாய்த்திரு நாடு.
அதன் புகழை நீபாடு

வளங்கள் நிறைந்த நாடு
அன்பை விதைக்கும் நாடு
அகிலம் உன்னைத் தேடி
வந்திடும் நாளை ஓடி

வந்தவர் காக்கும் அரசு
வாழ்த்தியே கொட்டுமுரசு
மக்களைக் காக்கும் நல்லரசு
உலகம் போற்றும் வல்லரசு

தூய்மை போற்றும் நாடு
வாய்மை காக்கும் நாடு
தாய்மை காக்கும் நாடு
ஏழ்மை நீங்கிய நாடு

எழுதியவர் : டாக்டர் குமார் (15-Aug-14, 9:23 pm)
பார்வை : 139

மேலே