நம்பிக்கை

நம்பிக்கை
நயவஞ்சகம் கொண்ட
சூழலில் எளிதில்
நம்புதல் என்பது
இயலாதது..
உடன்பிறந்தோர்
உடனிருப்போர்
ஊறு விளைவிக்க
தருணம் பார்க்கும்போது..
ஒருவர் மீது
நம்பிக்கை வைப்பதா
என சிந்திக்கும்
மனோநிலை உருவாகிறது ..
சிலநேரம் நல்ல
உள்ளங்களை தவற
விடும் சந்தர்ப்பம்
கூட வரலாம்..
எனினும் சமாளிக்க
மீண்டு வர
முன்னேறி செல்ல
தன்னம்பிக்கை துளிர்கிறது..
- வைஷ்ணவ தேவி