நேரம்
நேரம் பார்க்காது வாழ்ந்து
வந்தவனிடம் ஒரு திடீர்மாற்றம் !!
நேரக் கூடாதது நேர்ந்ததுபோல்
தாக்கிவிட்டதோ இந்த காதல்சீற்றம் ??
நேரம் காலம் சரியாய்
புலப்படாது தவித்து இருக்கிறேன் !!
நேரம் கெட்ட நேரத்தில்
தூக்கம் விழித்து தனியே சிரிக்கிறேன் !!!

