தனிமை - சித்ரா
கண்ணனே கானல்
நீராய்ப் போனதென்ன
கணவனே நீயின்றி
நான் வாழ்வதென்ன
உயிரை நான்
உன்னிடம்தான் சேர்த்ததென்ன
உதறி விட்டு
கண்ணீரைதான் வார்த்ததென்ன
மலரில் மயங்கி
மடியில்தான் தவழ்ந்ததென்ன
சருகாய் உலர்ந்து
நானுமிங்கே வீழ்ந்ததென்ன
சாபம் யாரோ
எந்தன்மேலே எறிந்ததென்ன
சட்டையின் வாசம்
சாபவிமோர்சனமாய் தெரிந்தாலென்ன
இரவிலே திடீரென்று
உன்னைப் பார்த்ததென்ன
இல்லையென்று உணரும்போது
என்னுடல்தான் வேர்த்ததென்ன
மறுமணம் செய்ய
மாப்பிள்ளைதான் வருவதென்ன
மனதிலே உந்தன்
முகமொன்றே எழுவதென்ன
வெள்ளையொன்றே வாழ்வின்
வண்ணமாய் ஆனதென்ன
என் பகலுமின்று
கருப்பாயத்தான் போனதென்ன
இருவருமே ஓருயிராய்
இருந்த நேரமென்ன
இன்னுமும் என்னிதயம்
துடிக்கும் மாயமென்ன
தனிமையே, தலை
எழுத்தாய் ஆனதென்ன
இன்பமே நீ, இத்தனை
தூரம் போனதென்ன
வலிக்கிறது மன்னவா உன் வலக்கையின்
மென்மை உணரும் போது
விழித் துடைக்க நீ இல்லையே
பெண்மையிங்கு திணறும் போது..