கவிதை வாளம் - சந்தோஷ்

இறுக்கமான மனநிலையில்தான்
என் கவிதை பலமடைகிறது.


என்னை கேளிக்கையாக்கி
வேடிக்கை பார்க்கும்
என் இனிய மனிதர்களே..!
அடிக்கடி என்னை
இடித்துக்கொண்டே
அடித்துக்கொண்டே
உங்கள் பாதையில்
இதமாய் இருங்கள்.

நான் ,
இரும்புத்தண்டவாள இருதயம்
உள்ளவனாகிவிட்டேன்.


என் மீதான
உங்கள் பயண வன்கொடுமையினால்
அடிவாங்கியும் நசுங்கா
கவிதை வாளமாய் நீளுவேன்...!
எழுதிக்கொண்டே நீளுவேன்.



எனக்கு தேவை
என் கவிதைக்கான கருப்பொருள்கள்...
கவிதையின் கரு என்பது........

உங்களால் எரிக்கப்பட்ட
எனதன்பின் சாம்பலிருந்தும்
கிடைக்கலாம்...!
அல்லது
என்னில் நீங்கள் குத்திய
கொடூர செயல்களிருந்தும்
வெடிக்கலாம் ...!


ஒன்றுமட்டும் உறுதி ...!

உங்கள் பயணம் முடியும்
என் பயணம் .....?????
மரணத்தையும் தாண்டி நீளும்...!

கவிதையாக...!
தமிழாக....!!

------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (18-Dec-14, 12:00 pm)
பார்வை : 92

மேலே