பறக்கும் மரம்

பறக்கும் மரம்

கணக்கில் காட்டா கருப்பின் இருப்பில்
கழுத்திற்கு மேல் தின்று கொழுத்தவன்
கறை படிந்த கைகளில்
கலை ரசனை என்ற பெயரில்
கத்திரியிட்டு கிளைகள் ஒடிங்கி
குரோட்டன்சாக வளர்வதைவிட
கடும் கோடையிலும்
கனிவாய் கருத்தாய்
கண்ணீரை உயிர்நீராய் பாய்ச்சும்
கலப்பைக்காரனின் கனிகள் தரும்
காட்டு மரமாய்
கார் மழைக்கு ஏங்கி
காற்றின் ஈரப்பதத்தில்
காவியமாய் உயிர் வாழ்வேனே...

எழுதியவர்
சூரியா

எழுதியவர் : சூரியா (30-Dec-14, 11:41 am)
Tanglish : parakkum maram
பார்வை : 95

மேலே