அழியும் உலகின் ரேகைகள் -ரகு
நிலம்ததும்ப ஓடும்
நதிநீருமெங்கே
நாணலுமெங்கே
நிலவுவிழுந்து
நிழலாடும்
நதியழகுமெங்கெ
நீரின் சீதனகள்
மீனின ஸ்பரிசமெங்கே
காணமற்போன
கரைமரங்கலெங்கெ
கரைபுரண்டோடும்
அலைநுரைகலெங்கே
மணற்திருட்டு செழிக்க
மண்வளமுமெங்கே
ஐயகோ யாவும்
கழிவுநீர்க் கால்வாய்களானதே
பாரினழகாம் ஆறுகளில்
பன்றிமேயும் கொடுமை
காணீரோ ?
உலகின் ரேகைகள்
ஒன்றிரண்டாய்த் தொலைதல்
பொறுத்தீரோ ?
மனிதர்காள்
அழகின் மொத்தங்கள்
அழித்தீர்
அழகின் மிச்சங்கள்
தொலைத்தீர்
மேகக் கைகள்
ஏந்தியநீருக்கு
மாசுப்புகை எச்சில்
முகிலில் உமிழ்ந்தீர்
இயற்கைக்கு நேருங்கொடுமை
என்றுதீரும் இந்நாட்டில்
வருங்காலச் சந்ததியர்க்கு
வரலாற்று ஏடுகளே சொல்லும்
மழைப்பொழிவு யாதென
நிலத்தில் ஓடியது ஆறுகளென
பரவிக் கிடந்ததுக்காடுகளென
கற்காலமனிதர்கள்
கல்லறைத்தேடிக்
காரித்துப்புவதுபற்றியும்.........!