BI SHOCK CYCLE - படித்தேன் பகிர்ந்தேன்

என் மாமாவின் அற்புதமான கட்டுரை..நண்பர்கள் பார்வைக்கு..................
_____________________________________________________________________________________

"அப்பா எனக்கு எப்போ பெரிய சைக்கிள் வாங்கி தருவீங்க ? " என்ற நான்கு வயது மகனின் கேள்வியில் இருந்து அவனுடைய சைக்கிள் காதலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ...
மகனின் கேள்விக்கு விடை கொடுக்கும் எண்ணத்தில் நிகழும் ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினம் ஒன்றை சைக்கிள் வாங்கும் தினமாகத் தேர்வு செய்து ( கண்டிப்பாக ஞாயிறு கிழமை ) பையனிடம் முன்கூட்டியே சொல்லியாச்சு ....அந்த வாரம் முதல் நாள் முதல் ( திங்கள்கிழமை ) அவனுடைய COUNTDOWN தொடங்கியது ...அவன் , வகுப்பு ஆசிரியரிடம் புது சைக்கிள் வரவு பற்றி சொல்லியாச்சு மேலும் அவன் நண்பர்கள் மற்றும் SCHOOL VAN DRIVER உட்பட அனைவரிடம் சொல்லியாச்சு ...அந்த ஒரு வாரம் அவன் சீக்கிரம் மற்றும் நேரத்திற்கு பல் தேய்க்க,குளிக்க, உணவு சாப்பிட , இப்படி அவனுடைய அன்றாட வேலையை எங்களுக்குச் சிரமம் குடுக்காமல் செய்யத் தொடங்கினான் ( சைக்கிள் வாங்கப் போகிறோம் என்னும் அஸ்திரம் எங்கள் கையில் இருந்ததால் ) .பேசியபடி ஞாயிறுக்கிழமை மாலை, குடும்பத்துடன் சைக்கிள் வாங்கக் கிளம்பினோம்,போகும் போதே என்ன நிறத்தில் சைக்கிள் வாங்குவது என்ற ஒரு பெரிய விவாதம் நடந்தது.கடைசியாக கடைக்குப் போய் நிறத்தை முடிவு செய்யலாம் என்ற பெரிய முடிவு எட்டியது.சைக்கிள் கடையில் சாதாரண விசாரிப்புகள் தொடங்கி REPLACEMENT WARRANTY வரை அனைத்தும் விசாரித்து அவனுக்குப் பிடித்த ( அங்கு இருந்த சைக்கிள்களில் ) நீல நிற சைக்கிள் எங்களால் வாங்கப்பட்டது." அப்பா சைக்கிள எப்படி வீட்டுக்கு கொண்டு போலாம்" என்ற அவனது கேள்விக்கு நான் விளையாட்டாக "எப்படி அம்மா நேற்று நமது காரைத் தொடர்ந்து வண்டியில் வீட்டுக்கு வந்தார்களோ அதே போல் இன்று நீ உன்னோட சைக்கிள ஒட்டிக்கொண்டு நம்ம கார் பின்னாடியே வீட்டுக்கு வா" என்றேன். அதற்கு அவன் " ஐயோ அதெல்லாம் வேண்டாம் சைக்கிள கார்ல பின்னாடி சீட்ல எனக்குப் பக்கத்துல வச்சுகிறேன்" என்ற முடிவு செய்துவிட்டான்.வீட்டுக்கு வந்து அவனுடைய சைக்கிளைப் பாட்டி மற்றும் தாத்தாவுக்குக் காண்பித்து அதை வீட்டுக்குள்ளே பல முறை அன்றே ஓடியாயிற்று( அவனும் பாட்டியும் சைக்கிளுக்குப் பூஜை போட்டதை மற்றொரு முறை பதியலாம் அவ்வளவு சுவாரசியம்)
ஒரு வாரம் முழுவதும் அவன் தூங்கும் நேரம் மற்றும் SCHOOL போகும் நேரம் நீங்கள் அவனை வீட்டில் சைக்கிளில் தான் காணமுடியும். காலை கண் விழிப்பது சைக்கிள் முகத்தில் , சைக்கிள் மணியொலி அவனுக்கு ALARM , இப்படி அவனது மொத்த உலகமும் அந்தச் சைக்கிளைச் சுற்றியே பயணித்தது.ஒருநாள் என் மனைவி என்னிடம் " என்னங்க நான் பையனுக்குச் சாப்பாடு குடுக்கும்போது அவன் பல்லுல கை பட்டதும் சுரர்ரர் ன்னு இழுத்தது என்னன்னு தெரியலை" என்று சொன்ன உடனே நான் "அவன் கைய கடிச்சிருபான் " என்றேன்.அதற்கு அவள் " அதெல்லாம் இல்லைங்க எதோ SHOCK அடிச்சா மாதிரி இருந்தது " என்றாள், நானும் அதைப் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ( என்றுதான் நாமெல்லாம் மனைவி சொல்வதை முதலில் கேட்டிருக்கோம்).ஓரிரு தினத்தில் பையனுக்கு நான் இரவு உணவு கொடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது ( குழந்தைக்குச் சாப்பாடு கொடுப்பது எவ்வளவு சிரமம் என்பதை தனியே எழுதலாம் ) நானும் அந்த SHOCK ஐ உணர்தேன். என்னுடைய அனுபவத்தை என் மனைவியிடம் சொன்னேன்.ஒரு ஏளன பார்வையில் "இப்போவாவது என் பேச்சை நம்புணீங்களே" என்று பொருள்படப் பார்த்தாள். குடும்பத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் மட்டுமே இந்த SHOCK விஷயம் தெரியும். நான் சற்று நிதானமாக யோசிக்கத் தொடங்கினேன்,சாப்பிடும்போது மட்டும் தான் இந்த SHOCK அனுபவம் அதுவும் விரல் நுனி படும்போது சுர்ர்ர்ர்ர் என்ற ஒரு உணர்வு அதற்கு அப்புறம் இல்லை மேலும் சாப்பிடும் நேரம் இல்லாத மற்ற நேரத்தில் இந்த உணர்வு இல்லை.இப்படி யோசிக்கும்போது (எப்படி யோசித்தால் என்ன அவன் சைக்கிள்ள இருக்கும் போது மட்டும் இது ஏற்படுது ... YES ...) இந்த அதிபயங்கர கண்டுபிடிப்பை என் மனைவியிடம் சொன்னேன் ( "எப்போவாவது உங்களுக்கும் .வேலை செய்யுது " என்ற அவளின் COMMENTய் நான் கேட்டதும் கேட்காத மாதிரி இருந்தேன் அதுதானே மரபு )இப்போ PROBLEM OBJECT சைக்கிள் என்று முடிவானபின் அதை ஊர்ஜிதம் செய்ய பையன் சாதாரனமாக சைக்கிள் ஓட்டும் போது நானும்,என் மனைவியும் அவன் ஒரு ரவுண்டு முடித்தவுடன் ஒரு GENTLE TIP OF FINGER TOUCH ( விரல் நுனி தொடுதல் ) செய்வோம்.ஒரு ரவுண்டுக்கு ஒரு பீல் இருக்கும் இரண்டாவது தடவை முயன்றால் அந்த உணர்வு இருக்காது ( என்ன ஒரு கணித முறை ஒரு ரவுண்டு க்கு ஒரு SHOCK ... எக்ஸ்ட்ரா SHOCKS இல்லை ).எங்களுடைய இந்த அத்தனை TESTING முயற்சிக்கும் என் பையன் மிகவும் பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்தான் எங்களுக்கு அந்த SHOCK உணர்வு ஏற்படும் போது அவனுக்கும் சொல்லத் தெரியாத ஏதோ ஒரு UNESAYNESS உணர்ந்தான். சில நேரத்தில் சுர்ர்ர்ர்ர் என்று சத்தம் கூட வரும் அதனால் அவனுக்கு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் அவனுடைய சைக்கிள் பயணம் சுகமாக நலமாய் இருக்க வேண்டும். எங்களுடைய எல்லா சோதனையின் முடிவும் சைக்கிள் தான் பிரச்னை என்ற முடிவுக்கு கொண்டு வந்தது ஆதலால் சைக்கிள் வாங்கிய கடையில் சென்று கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.சைக்கிள் கடையில் சென்று கேட்கலாம் என்று முடிவு செய்தாலும் என்னுடைய 6ம் அறிவு ( அப்படி ஒன்று எனக்கு இருப்பதாகவே வைத்துகொண்டாலும் ) அதை ஏற்க மறுத்தது .அந்த சைக்கிளில் BATTERY இல்லை மேலும் CURRENT சம்பந்த பட்ட எந்த விசயமும் இல்லை பிறகு எப்படி இப்படி."என்னங்க SUNDAY வரை காத்திருக்க வேண்டாம் இன்னைக்கே நீங்க உங்க ஆபீஸ் டிரைவர் அனுப்புங்க நாங்க போய் சைக்கிள் கடைல கேட்குறோம் " என்று என் மனைவி சொல்ல நானும் அதை ஆமோதித்தேன்.நான் என்னுடைய DRIVERக்கு இந்த விஷயத்தை சொல்லும் போதே அவர் என்னை நம்பாதது புரிந்தது,இருந்தாலும் நான் சொன்னதால் ( உயர் அதிகாரி அல்லவா) DRIVER கூட இன்னொரு நபருடன் ( அவர் எங்க ஆபீஸ்ல இருக்கும் electrician என்பது அப்புறம் தான் எனக்கே தெரியும் ) சைக்கிளைக் கடைக்கு எடுத்துப்போக வசதியாக,என் வீட்டுக்கு அவருடைய வண்டியில் கிளம்பினார்.என்னுடைய OFFICE DRIVER ஐப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். நிறைய பேசக்கூடிய நபர்,வண்டி மற்றும் கார் பற்றிய எல்லா விசயமும் தெரியும் என்று உணர்த்துவார் தன் பேசின் மூலமாக ஆதலால் சைக்கிள் பற்றியும் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.மேலும் கொஞ்சும் ஆர்வக் கோளறு அதிகம் உள்ள மனிதர்.DRIVER வீட்டுக்குப் போனதும்,அவர் இன்னும் இந்த SHOCK விஷயத்தை நம்பாததால்.அவர் என்னுடைய பையனை சைக்கிள் ஓட்டச் சொல்லி சாதாரனமாக( உள்ளங்கையால் ) தொட்டுப் பார்த்தார் அவருக்கு SHOCK உணர்வு இல்லை , உடனே அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை சைக்கிள் நல்லா தான் இருக்கு" என்று சொல்ல அதற்கு என் மனைவி "பையனை தொடும் போது ஐந்து விரலால் அணைத்து தொட கூடாது நீங்கள் அவனை உங்களோடு விரல் நுனியில் தொடவேண்டும் (விரல் நுனி தொடுதல் ) " என்று பதில் சொன்னாள்.அதன்படி என்னோட DRIVERக்கும் அந்த SHOCK உணர்வு ஏற்பட ஆதலால் இந்த பிரச்சனைக்கு அவரே தீர்வு காண முயற்சியைத் தொடங்கினார் .( DRIVER பற்றி ஏற்கனவே சொன்னேனே )...
உடனே அவர் சைக்கிளைக் கீழ் வீட்டுக்குக் கொண்டு போய் அங்கே வைத்து என் பையனை ஓட்டச் சொல்லி TEST செய்தார் அங்கேயும் அவருக்கு SHOCK ஏற்பட்டது.சாலையில் போகும் ஒரு சின்னக் குழந்தையைக் கூப்பிட்டு என் வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டச் சொல்லிப் பார்க்கிறார் அனால் அந்தக் குழந்தையிடம் அந்த SHOCK உணர்வு இல்லை...SO சைக்கிளில் பிரச்னை இல்லை.கார் பார்கிங் மற்றும் சாலையில் என் பையன் சைக்கிள் ஓட்டச் சொல்லி TEST செய்யும் போது அந்த SHOCK உணர்வு இல்லை SO பையன் மற்றும் சைக்கிள்ள பிரச்னை இல்லை.TESTING முடிவுகள்...
1. வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டினால் என் பையன் மேல் மட்டும் அந்த உணர்வு இருக்கு மற்ற குழந்தையிடம் இல்லை .. அப்படி என்றால் சைக்கிளில் பிரச்சனை இல்லை மற்றும் வீட்டிலும் பிரச்னை இல்லை.ஒரு வேளை என் பையனிடம் ???
2. வீட்டுக்கு வெளியில் ஓட்டினால் என் பையனிடம் அந்த உணர்வு இல்லை சைக்கிளில் பிரச்சனை இல்லை மற்றும் என் பையனிடம் பிரச்னை..இல்லை...
கடைசி முயற்சியாக பக்கத்துக்கு வீடு சைக்கிள் வாங்கி என் பையனை என் வீட்டுக்குள் ஒட்டி பார்த்து TEST பண்ணலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தனர்.அன்று சாயங்காலம் என் மனைவி என்னிடம் ."இனிமேல் இந்த விஷயத்தை இப்படியே விட்டுரலாம் பையனை சோதனை எலியாக மாற்ற வேண்டாம் ... இன்னைக்கு தான் அவனோட தாத்தா பாட்டிக்கு இந்த விஷயம் தெரியும் அவங்க ரொம்ப பயபடுறாங்க ...... நம்ம பையனை எல்லோரும் வினோதக் குழந்தையைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள் ...இன்னும் ஒரு படி மேல போய் பையனிடம் இருந்து CURRENT எடுத்து வீட்டுக்கு supply பண்ணலாம் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் " என்று வருத்தப் பட்டாள்.அடுத்த நாள் ஆபீஸ் விசயமாக என்னுடைய GM - ELECTRICAL என்னை சந்தித்தார் .அப்பொழுது பேச்சோடு பேச்சாக இந்த சைக்கிள் shock விஷயத்தைச் சொன்னேன் அப்பொழுது அவர் " ஆமாம் சார் என்னோட elecrician நேத்து உங்க வீட்டுக்கு வந்தவன் சொன்னான் .கவலைப் பட ஒன்றும் இல்லை சார் ... உங்க பையன் மேல power genarate ஆகலை இது ஒரு சின்ன maganetism theory . எந்த ஒரு இரும்பு பொருளும் magnet அருகில் ரொம்ப நேரம் இருந்தால் அந்த இரும்புப் பொருள் magnet ஆக மாறிவிடும். அந்த மாதிரி சைக்கிள் தயாரிக்கும் இடத்தில் ஒரு சின்ன பால்ரஸ் magetic power ஓட உங்க CYCLE pedal joint ல சைக்கிள்ள assemble ஆகி இருக்கும், அதனால் சைக்கிள் ஓட்டும் போது magetic energy generate ஆகும் அந்த energy ground ஓட earth ஆகாமல் சைக்கிள்ள இருக்கும் அந்த current சின்ன பசங்க மேல ( எல்லா சின்ன பசங்க மேலயும் pass ஆகும்ன்னு அவசியம் இல்லை ) pass ஆகும் அப்படி உங்க பையன் மேல பாஸ் ஆனா ஒரு சின்ன விஷயம் ஒரு external Object ( உங்க நுனி விரல் ) மூலம் ground ஆகும் அதுதான் நீங்க தொடு விரல் படும் போது உங்களுக்கு ஒரு சின்ன shock உணர்வு ஏற்படுது அது வேறொன்றும் இல்லை அந்த சைக்கிள்ள generate ஆகிருக்கும் magnetic பவர் discharge / ground ஆகுது " என்று ஒரு நீண்ட இயற்பியல் தத்துவத்தை முடித்தார் ( என்னோட MIND VOICE . நமக்கும் சயின்ஸ்க்கும் சுட்டு போட்டாலும் வராதே பின்ன எப்படி இதெல்லாம் புரியும் ) இருந்தாலும் அதை வெளிகாட்டாமல் நான் "ஆனா சார் வீட்ல இன்னொரு சின்ன குழந்தை ஓட்டும் போது அந்த shock இல்லையே ??? அதற்கு அவர் " அதுதான் சொன்னேனே எல்லா குழந்தையிடம் pass ஆகாது ... MAY BE ONE IN HUNDRED அப்படி நடக்கலாம் ..." என்றார் எனக்கு மேலும் ஆர்வம் ஏற்பட " சார் OPEN SPACE ல வீட்டு வெளியில ஓட்டும் போது இந்த shock இல்லையே " என்றேன் அவர் அதற்கு பொறுமையாக " அமாம் சார் closed space ல தான் அந்த சிறிய converted energy ground ஆக வாய்ப்பு கம்மி ஆதலால் தான் அதற்கு ground ஏற்படுத்தும் கருவியாக இருக்கிறோம் ... open space அது ரொம்ப ஈஸியா காதோடு கலக்கும்" என்று விளக்கம் அளித்தார் ...இப்பொழுது நான் முழுவதும் CONVINCE ஆகி இதற்கு என்ன SOLUTION சார் " என்றேன்
அதற்கு அவர் சிரித்துகொண்டே " எதாவது ஒரு சின்ன நீளமான இரும்பு கம்பி எடுத்து சைக்கிள்ள இருக்கும் எதாவது இரும்பு பகுதிக்கும் தரைக்கும் தொடர்பு ஏற்படுத்திவிடவும் ....PROBLEM SOLVED ...." என்றார் நிறைவாக.இந்த அறிவியல் தத்துவத்தை வீட்டில் மனைவியிடம் சொல்லி சைக்கிளுக்கு ஒரு வால் கட்டினோம் ....என் பையனிடம் இந்த கம்பி கட்டினால் தான் SHOCK அடிக்காது என்று தன்னிலை விளக்கம் அளித்தோம் ...
இப்பொழுது அந்த shock இல்லை.ஒருவேளை என் பையன் எங்களை மிரட்ட இனி வரும் காலங்களில் அப்போ அப்போ கம்பியை சைக்கிள்ள இருந்து எடுத்து எங்களுக்கு SHOCK கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது !!!!

பின் குறிப்பு
"நன்றாகக் கூர்த்து பாருங்கள் சைக்கிள் SUPPORTING wheelல ஒரு கம்பி ( வால் ) தெரியுதா அது தாங்க விடை ( SHOCK க்கு விடை கொடுத்தது ) ???? ":

எழுதியவர் : ராஜன் (15-Jan-15, 9:20 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 277

மேலே