இறைவா ஏன் இந்த பாராமுகம்
உடல் ஒத்தி தரும்
மெத்தை தூக்கம்
உனை கேட்கவில்லை!
தலை சாய்க்க
தனக்கென ஒரு
தரை தானே கேட்டேன்!
பகட்டாக போட்டுக்காட்ட
பளக்கும் பட்டாடை
உனை கேட்கவில்லை !
அந்த இடம்
மறைத்து வைக்க
அங்குல துணிதானே கேட்டேன்!
வயிறு முட்ட மூவேளை
வகை உணவு
உனை கேட்கவில்லை!
ஒட்டிய வயிறுக்கு
வாய் கவளம் சோறு
அளவாய்தானே கேட்டேன்!
சாதிக்கும் திறனையும் ஏன் அறுத்தாய்!
சாகும் மனதினையும் நீ கெடுத்தாய்
ஏதும் இல்லாமல் ஏன் படைத்தாய்!
ஈனப்பிறப்பதனை நீ கொடுத்தாய்!
கல்லாகி போனதோ உந்தன் அகம்!
இறைவா உனக்கேன் - இந்த
பாரா முகம்!