என் குழந்தைப்பருவம்
நான் கடவுளாக வாழ்ந்த காலம்
நானே எழுதி வாசிக்க மறந்த நல்ல கவிதை
வாழ்க்கை சேற்றுக்குள் தவறி விழும் முன்
ஒவ்வொரு உயிரும் தம் மீது பூசிக்கொள்ளும்
நறுமணப்பூச்சு குழந்தை பருவம்,,,
வாழ்க்கை என்னும் துருவலகு
என் குழந்தைபருவம் என்னும்
தேங்காய் பாதியை துருவித் துருவிப்
பூவாக விழவைத்து என்னை ஓடாக நிறுத்திவிட்டது...