காத்திருப்பு

காத்திருப்பு

கதிரவன் மேகம் விலக காத்திருப்பு
கன்னிமகள் காதல்மலர காத்திருப்பு
காதலன் சமிக்கைக்கு காத்திருப்பு
காதலியின் கண்ணசைய காத்திருப்பு
காதல் கைகூட காத்திருப்பு
மணவரையில் மனைவியாக காத்திருப்பு
மணம் முடிந்தபின் மகவுக்கு காத்திருப்பு
கர்ப்பத்தில் கனவுடன் காத்திருப்பு
கனிமொழியில் மகவு பேச காத்திருப்பு
மகவு வளர்ந்து மகளாக காத்திருப்பு
கன்னிமகள் தாயாக காத்திருப்பு
தாய் அவள் சேய்காண காத்திருப்பு
சேய் தனை அழைக்க கண்மூடி காத்திருப்பு
வாழ்க்கை முடியும் வரை தொடரும் இந்த காத்திருப்பு

எழுதியவர் : ராம் (1-Mar-15, 7:42 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : kaathiruppu
பார்வை : 100

மேலே