என்னவளே -தொடர்கதை

என்னவளே -தொடர்கதை
பகுதி-8
இரவு 10 மணி மீண்டும் தொலைபேசி அடித்து ஓய்ந்தது .ராஜலக்ஷ்மி அம்மாள் கல்பனாவே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.அருகில் படுத்திருந்த கல்பனா அம்மா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றாள்.ராஜலக்ஷ்மி அம்மாள் நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ..நீ இது வரைக்கும் எங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுத்துட்ட இனிமே போற வீட்லயும் அவங்க எல்லார் கூடவும் விட்டு குடுத்து அனுசரிச்சு நீ நடந்துக்கணும் ..இதே போல நாங்க என்னைக்கும் தலை நிமிர்ந்து வாழ நீ தாம்மா தன்மையா எல்லார்கிட்டவும் நடந்துக்கணும் என்றாள்.

அம்மா சக்ரவர்த்தி என்று கல்பனா தொடங்கிய வுடனேயே ராஜலக்ஷ்மி அம்மாள் கல்பனா எனக்கும் உங்க அப்பாவுக்கும் சக்ரவர்த்திய ரொம்ப புடிச்சிருக்கு அவங்க அக்கா மாமா கூட ரொம்ப அமைதியானவன்களா தெரியுறாங்க சகரவர்தியும் பேருக்கு ஏத்த மாதிரி ஜம்முன்னு சக்ரவதியாவே இருக்கான் நம்ம குடும்பத்துக்கு ஏத்த வரனை அந்த திருப்பதி ஏழுமலையான் தான் கொண்டு வந்து நம்ம கிட்ட சேர்த்திருக்கார்.எந்த காரணம் கொண்டும் இந்த சம்மந்தத்தை நாங்க விட்டு குடுக்கறதா இல்லை .அவங்க என்ன சீர் செனத்தி கேட்டாலும் இத முடிட்சிடலாம்னு இருக்கோம் என்று அம்மா ராஜலக்ஷ்மி மூச்சு விடாமல் சொல்லி முடித்தால் ..

கல்பனா அம்மா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று ஆரம்பித்தால் ராஜலக்ஷ்மி அம்மாள் ஏம்மா ரொம்ம நேரம் ஆய்டுச்சு காலைல நீ ஆபீஸ்க்கு போகணும் சீக்கிரமா தூங்கு எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என்றாள் அவள் சொல்லபோகும் விஷயம் அறிந்து அதை தாங்கும் சக்தி இல்லாததால் அவளை பேசவே அனுமதிக்க வில்லை ராஜலக்ஷ்மி அம்மாள் .

பகுதி-9
கல்பனா இரவு முழுவதும் தூங்காமல் யோசிதுக்கொண்டிருந்தால் ..ராஜலக்ஷ்மி அம்மாள் கல்பனாவை கவனித்தால் மற்றவர்கள் சொல்வது போல் நாம் மிகுந்த அன்பு செலுத்தி கல்பனாவை கண்டிக்க மறந்து விட்டோமா என்று தன்னையே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால் ..ஆக அன்று அவர்கள் இருவருக்கும் சிவராத்திரியாய் இருந்தது .

மறுநாள் காலை கல்பனா வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாரானால் .ராமைய்யா பிள்ளை குடையை கொண்டுவந்து கல்பனாவிடம் கொடுத்தார் . கல்பனா தன் மதிய உணவு எடுக்க சமையல் அறையினுள் நுழைந்தால் ...ராஜலக்ஷ்மி அம்மாள் அவளிடம் கல்பனா இரவு நீ தூங்க வில்லையா அலுப்பாக இருந்தால் இன்றும் விடுப்பு எடுத்துக்கொள் என்றாள் ..இல்லை எனக்கு மிகுந்த பணி உள்ளதம்மா கட்டாயம் இன்று செல்ல வேண்டும் என்றாள் சுரத்தே இல்லாமல் .
ராஜலக்ஷ்மி அம்மாள் கண் கலங்கியவாறு கல்பனா உன்னால் உன் அப்பாவும் நானும் என்றுமே தலை குனிந்தது கிடையாது உன் அப்பாவை பற்றி இந்த ஊரே பெருமையாக பேசும் ..

நீயும் அதற்கு ஏற்ப இத்தனை நாள் இருந்தாய் உன் திருமணம் சிறப்பாக நடை பெற்றால் அதுவே எங்கள் பாக்கியம் என்றாள் .கல்பனா தலை குனிந்தவாறு தன் கை பையை எடுத்துக் கொண்டு வெளியேறினால் ..அவள் அலுவலகம் வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் இருப்பதால் அவள் என்றும் நடந்து செல்வதையே விரும்புவாள் .வாக்கிங் என்று தனியே நேரம் ஒதுக்காது அலுவலகம் செல்வதையே பாடி பிட்நெஸ்கும் பயன்படுத்தினால் ..அவள் அவர்கள் வீட்டு தெருமுனையை தாண்டியதும் கல்பனா என்று கத்தியவாறு சியாம் வேகமாக வந்து கொண்டிருந்தான் ..

--------------- தொடரும் ----------------

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (2-Mar-15, 1:44 pm)
பார்வை : 225

மேலே