பயம் - தொடர்கதை - நான்கு - கிருஷ்ணா

...........................அங்கே கூடியிருந்தத அனைவரும் ஒருங்கே கவனத்தை செலுத்தியிருந்தனர். எவ்வளவோ முயன்றும் சிருக்கு அது என்ன என்பது விளங்க வில்லை. ஆனால் எதோ மிகப்பெரிய விஷயம் என வியந்து பார்த்துகொண்டிருந்தனர். மேடையிலிருந்த ஒருவர் மட்டும் குறுநகையோடு எவ்வித வியப்பும் இல்லாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நடப்பது அவருக்கு பிடிக்கவில்லையா இல்லை அதில் அவர்க்கு ஆர்வம் இல்லையா என்பது தெரியவில்லை. அது அவரது பிரச்னை நமக்கு என்ன வந்தது.

.........................சில நிமிடங்களுக்கு பிறகு கூட்டத்திலிருந்து கைத்தட்டல் பறந்தது. " புள்ளனா இப்படி இருக்கணும் நீயும் இருக்கியே ..! " என ஒருவர் அருகிலிருக்கும் ஒரு சிறுவனைப்பார்த்து சொன்னார். அந்த சிறுவன் அதை கண்டுகொண்டவனாய் தெரியவில்லை. அருகில் தனியாய் நின்ற அமுதன் சொன்னவரை பார்த்தான். ஆம். நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் தான் அது. சிறிது நேரம் கழித்து ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அமுதன் மேடையின் அருகிலேயே நின்று. ஒரு குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

......................அமுதனுக்கு மனம் எதோ பாரமாக இருந்தது. ஏதோ அவன் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அப்போது அவனை ஒருவர் கடந்து போனார். அமுதனுக்கு பழக்கப்பட்டவராய் தோன்றவும் பட்டென கேட்டான்.

"ஐயா....". அவர் திரும்ம்பினார். மேடையில் ஏதும் நடக்காததை போல அமர்ந்திருந்தாரே அவர் தான் அது.
"நான் ஆறாம் வகுப்பு மாணவன். உங்களிடம் ஐந்தாம் வகுப்பு படிதேனே.! " என்றான் அமுதன். அவருக்கு யாரென்று தெரியவில்லை என்றாலும் தெரிந்தவரை போல முகத்தை வைத்துக்கொண்டார்.

" இன்னைக்கி மேடைல ஒரு சின்ன பொண்ணு 1330 குறளையும் மனப்பாடமாய் சொன்னதே.. சே..எவ்ளோ கைத்தட்டல் அப்படியே இடி போல கெட்டுதில்ல. எல்லாருமே அந்த பொண்ணு சொல்றதையே பார்த்துட்டு இருந்தாங்க. "

அவருக்கு புரிந்து போனது. " ஆமாம். அதற்கென்ன இப்போ? "

"இல்லை ஐயா.. இந்தமாதிரி என்னையும் சின்ன வயசுல யாராவது சொல்லிகொடுத்திருந்தா. நானும் கைத்தட்டல் வாங்கிருப்பேன் "

" இப்ப நீ என்ன பண்ணப்போற.? "

" நானும் அடுத்த வருஷம் இந்த மாதிரி குறளை வாசிச்சு காமிச்சா எனக்கும் கைதட்டல் கிடைக்கும்-ல "

" அப்போ உனக்கு கைதட்டல் தான் வேணுமா? அப்படினா வங்கிக்கோ." என சொல்லிவிட்டு கையை இரு முறை தட்டினார்.

அமுதனுக்கு விளங்காமல் அப்படியே நின்றான்.

" வள்ளுவர் எழுதினது அஞ்சு நிமிஷம் மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்க இல்லை. அது ஒவ்வொன்னும் வாழ்க்கைக்கான வழிமுறைகள். அதுல ஏதாவது ஒரு குறளை எடுத்து உன் வாழ்கை ல கடைபிடி. அது உன்னை பெரிய ஆள் ஆக்கும்" கோபமாய் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அமுதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

எழுதியவர் : கிருஷ்ணா (3-Mar-15, 1:02 pm)
பார்வை : 181

மேலே