என்னவளே-தொடர்கதை

என்னவளே - தொடர்கதை
பகுதி-10
கல்பனா சியாம் குரல் கேட்டு நின்றாள்.தினமும் எனக்கு வெயிட் பண்ணுவ இப்போ என்ன திரும்பி கூட பாக்காம போற என்றான் சியாம்.சியாம் இனிமே எனக்கு நீ வெயிட் பண்ணாத நானும் வெயிட் பண்ண முடியாது என்று நடக்க தொடங்கினாள்.

ஏன் திடீர்னு இப்படி சொல்ற கடந்த ரெண்டு வருஷமா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து தானே ஆபீஸ் போறோம் உங்க ஆபீஸ் பக்கத்துலையே எங்க ஆபீஸ் இருக்கறனால வரும் போதும் நீ எனக்கு வெயிட் பண்ணுவியே ஏன் இப்படி திடீர்னு என்றான் ..ஆமா இனிமே என்னால வெயிட் பண்ண முடியாது ஆபீஸ்ல எனக்கு நிறைய வேலை இருக்கு என்ன தொந்தரவு செய்யாத என்று தரையை பார்த்துக்கொண்டே கூறி முடித்து புறப்பட்டாள்.

சியாம் செய்வதறியாது திகைத்து நின்றான் ..மீண்டும் கல்பனா என்று சத்தமாக கூப்பிட்டு அவள் பின்னே ஓடி சென்றான் .கல்பனா மெதுவாக எதுக்கு இப்படி கத்தற யாரவது பார்த்து என் அப்பாக்கிட்ட சொல்ல போறாங்க என்றாள்.

சியாம் யாரவது என்ன சொல்றது நானே உங்க அப்பகிட்ட போய் நமக்குள்ள இருக்கறத சொல்ல போறேன் என்றான் ..கல்பனா ஒரு நிமிடம் மௌனமாய் நின்று நமக்குள்ள என்ன என்றாள் .
நமக்குள் என்னவா உன் மனதில் நான் இல்லை என்றான் சியாம் ..

பகுதி-11
என்ன சியாம் சொல்ற எனக்குள்ள நீ இல்ல என்றாள் கல்பனா தரையை பார்த்த வண்ணம் . ஏன் இப்படி பொய் சொல்ற பணக்கார மாப்பிளை கிடைத்தவுடன் உன் மனதில் நான் இல்லை என்கிறாயா என்றான் சியாம் வருத்ததுடன் .சியாம் உன்கிட்ட நான் என்னைக்காவது சொல்லி இருக்கனா உன்னை விரும்பறேன்னு.நீயே தப்பா புரிஞ்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்றது என்றாள் கல்பனா .

கல்பனா விரும்புகிறேன்னு சொன்ன தான் புரியுமா உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு புரியுமடி என்றான் . என்ன என்னை டீ சொல்ற ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ இனிமே எனக்காக நீ காத்திருக்க வேண்டாம் என்றாள் .

கல்பனா விறு விறு வென்று நடக்க தொடங்கினாள் .அவளுக்கு தெரியும் பொய்யை மறைப்பது மிக கடினம் என்று .கல்பனா நில்லு என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ என்றான் சியாம் .சியாம் சீக்கிரமா என்ன கேக்கணுமோ கேள் என்றாள் .

நீ என்ன விரும்பவே இல்லையா ?
இல்லை

நான் குடுத்த போட்டோ எல்லாம் எதுக்கு வாங்கி கிட்ட ?
அதுல உன் போன் நம்பர் இருந்தது எப்பாவது உதவுமேன்னு வாங்கிக்கொண்டேன்

நான் கூப்பிடும் போது எல்லாம் ஹோட்டல்கு வந்தாயே...
ஆமா வந்தேன் உன் கூட சேர்ந்து எத்தனையோ நாள் டீ டிபன் சாப்பிட்டுருக்கேன் ..அப்போ எல்லாம் உனக்கும் சேர்த்து நான் தான் பணம் குடுத்திருக்கேன் .

நான் சொன்ன நாள் சொன்ன கலர் ல டிரஸ் போடுவியே
ஆமா ஏதோ பண்ணேன்

இத்தனை நாள் என்கூட சேர்ந்து ஆபீஸ் போக பிரியபட்டியே அதுக்கு என்ன சொல்ல போற
ஆமா நான் உன்னை என் வழி துணையா தான் நினைத்தேன் என் வாழ்க்கை துணையா இல்லை என்றாள்..சியாமிற்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது

அப்ப நீ என்ன விரும்பவே இல்ல
இல்ல என்றாள்

என் கண்ணை பார்த்து சொல் என்றான்
அவளும் நிமிர்ந்து கூறிவிட்டு அலுவலகத்தில் நுழைந்தால் ....சியாம் தன் மனக்கோட்டை தகர்ந்ததாக நினைத்தான் .

இந்த தேவதை தமக்கு இல்லை என்பதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ...

ஐந்து நிமிடம் கழித்து ஒரு முடிவுடன் கல்பனா வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான் ...

----------------------- தொடரும் ------------------------------------

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (3-Mar-15, 2:25 pm)
பார்வை : 230

மேலே