நான் காதலிப்பது உன்னைத்தான்

எப்போதும்
நான்..!
உன்னைப் பார்க்கத் துடிப்பதாலும்
நீ..!
என்னைப் பார்க்கத் துடிப்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்

சந்திக்கும் நொடிகளில்
நான்..!
உன்னைத் தொட்டுக் கொள்வதாலும்
நீ..!
என்னைத் தொட்டுக் கொள்வதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


தோள் மடி என
என்னை பாய் ஆக்கி
நீ...!
என்னில் படுத்துக் கொள்வதாலும்
நான்...!
உன்னில் படுத்துக் கொள்வதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


கன்னம் இடைவயிறு
நெஞ்சம் முதுகு என
நீ...!
என்னை முத்தமிட்டுக் கொள்வதாலும்
நான்...!
உன்னை முத்தமிட்டுக் கொள்வதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


இருசக்கர வாகனத்தில்
இறுகக் கட்டிப்பிடித்து பயணிக்கையில்
நீ..!
என்னில் மகிழ்வதாலும்
நான்..!
உன்னில் மகிழ்வதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்



உன்மொழி எனக்கும்
என்மொழி உனக்கும்
பரிச்சயப்பட்டு விட்டதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்

நான்..!
உன்னோடுப் பேசிக்கொண்டிருக்க
நீ...!
என்னோடுப் பேசிக்கொண்டிருக்க
ஆர்ப்பரிக்கும் அலைகள்
நம் செவிகளுக்கு எட்டாமலிருப்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


நெஞ்சின் மேல் விழுந்து
எழுந்து விழுந்து
என் ஆசை யாவையும்
நீ..
தீர்ப்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


எந்த பழத்தையும் முழுதாய்
மீதியில்லாமல்
நான்..
உனக்குத் தர
மீதியோடு முழுதாய் நீ
எனக்குத் தர
இருவருக்கும் வேண்டாமென்று
ஒற்றுமையாய் ஒதுக்கி வைப்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


நாவின் எச்சம் தொட்டு
தின்பண்டம் சேர்த்துத்
தருகையில்
உன்
அடிமையாய்
நான்
உண்பதாலும்
என் அடிமையாய்
நீ உண்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்

ஓடும் குருதியில்
பங்கு உனக்கு
நான் கொடுத்திருப்பதாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்


நீ...!
என்னைத் தாயாகப்
பெற்றெடுத்ததாலும்

நான்..!
உன்னை மகளாய்
பெற்றெடுத்ததாலும்
நான் காதலிப்பது உன்னைத்தான்

எழுதியவர் : செ.பா.சிவராசன் (11-Mar-15, 9:28 am)
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே