தொகுப்பு

வெகு நாட்கள் ஆகிறது இந்த தொகுப்பை திறந்து
என்னை வறவேற்க இவள் முகமெல்லாம் சிரிப்பு
எத்தனை மாற்றங்கள் எனக்கும் இவளுக்கும்
ஏறக்குறைய எல்லாம் மாறித்தான் போயிருக்கின்றன.
அவள் உள்ளொன்று வைத்து கபடம் செய்யாத மகள் அப்பாவுக்கு
பேசாத வார்த்தைகளும் அன்பாகவே அம்மாவிடமிருந்து,
பல தேசங்கள் பயணக்கவில்லை ஆனாலும்
முற்றத்தில் குளிர் காற்று சிலிர்த்தது
இன்னும் விருப்பங்களுக்கும் செயல்களுக்கும்
இடைவெளி குன்றி அவள் கொண்டாடினாள்.
அனைத்தும் ஒருநாள் என்னை விட்டு விலகியதோ
நான் என்வென்று அறியாத அணியை
ஒருவர் கழுத்தில் கட்டிய அன்று முதல்,
நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன்
மீன் தொட்டிக்குள் மீனுக்கு சுதந்திரம் என்ன குறை.
மாற்றங்கள் மாறாதது
நல்லதுதான்
என் மகள் மகிழ்ச்சியாக அழைக்கிறாள்
அடுத்த தொகுப்பிற்கு.

எழுதியவர் : yuvaraj (13-Mar-15, 11:05 pm)
சேர்த்தது : Yuvaraj Kandhasamy
பார்வை : 171

மேலே