ராஜாதான்
பெயர் தெரியா உலகத்திற்க்கு இவன் ராஜா
தனக்கு சேவை புரிய நாற்புறமும் மனிதக் கூட்டம்
பிறர் பேசும் மொழி புரியவில்லை
காதல் மொழியறிந்தேருந்தான்
ஆடம்பர மாளிகை அதில்
பொழுதுபோக்கு என சுகபோகம்.
இந்த ராஜாவுக்கு இங்கிருப்பது
உடலோடு ஒட்டிய துணியும் அதன் மணமும்தான்
மதி மங்கிய மயக்கம் மதுவால்
ஈக்களும் கொசுக்களும் உறவாடிக் கொண்டிருந்தன
அட கருமம் என்று உங்கள் வாழ்த்தை
காரி உமிழ்ந்து தெரியப்படுத்த வேண்டாம்
அதை செய்து சென்றவர்கள் ஏராளம்.
ஏதும் பொருள் தேருமா என பார்த்தபடி சென்ற
பாவப்பட்ட ஜீவன்களும் இருந்தனர்
விடிந்ததும் போர் மூளும் நாளைய புதிய உலகத்திற்க்கு
மதுக்கடை வாசலில்
விடியும்வரை அவன் ராஜாதான்.

