கோழைகள் அகராதி
அறிவிக்கப்படாத வரையில்
உரிமைகள் உதவா!
கூறவே முடியாதவை
உரிமைகளே ஆகா!
பேசாத வார்த்தைகள்
காதல் ஆகாது!
வெளிப்படுத்தப் படாத
உணர்வுகள் பாசமாகாது!
நன்மைகளே இல்லா
நடவடிக்கைகள் நியாயமாகா!
நேர்மை இல்லாத
செயல்கள் நீதியாகா!
இவை எல்லாம்
கோழைகளின் அகராதி!
கோழைகளால் பேசவும் முடியாது!
பேச விடவும் முடியாது!

