பெண்ணுரிமை

எம் கையில் புரளும் கோடிகளுக்கெல்லாம்
மதிப்புண்டு......
ஆனால்,
தெருக்கோடியில் கூட மதிப்பில்லை எமக்கு...........
பெண்ணாய்ப் பிறந்ததால்...!!!!
ஆறாம் அறிவை முழுவதுமாய் ஆண்
பயன்படுத்தினால் அறிவாளி....
நான் பெண் என்பதால் “அகம்பாவம் பிடித்தவள்”
உரைப்பது ஊராறாயின்
உதறித் தள்ளி விடலாம்....
உற்றார் என்பதால்
உறவின் அருமை அறிந்து ஊமையே ஆனேன்...
அன்று,
அடுப்படியில் பெண்ணை அடிமையாக்கினீர்கள்...
இன்று,
பெண்ணுரிமை தந்துவிட்டோம் என்ற பெயரில்
நூறடுக்கு கட்டிடத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள்
கைதியாக்கிவிட்டீர்...........!!!!!!!
ஆணாதிக்கம் என்று
ஆண்களைச் சாட விருப்பமில்லை...
பெண்ணுரிமை காக்க பெண்ணே தவறியதன்
அவல நிலை கண்டு தான் வருத்தம் கொண்டோம்...!!
“இந்த விந்தை மனிதர் தலை கவிழும் நாள் தான் என்னாளோ?”
பாரதி போலவே நானும் கனாக் காண்கிறேன்.........
பெண்ணியம் பேசுவது விடுத்து
பெண்ணியம் காக்க புறப்படுவோம்....
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்......!!!!!!!!

எழுதியவர் : தமிழினி (30-May-15, 11:02 pm)
Tanglish : PENnurimai
பார்வை : 125

மேலே