நோயின் பாயும் காதலும்

வருபவரை வரவேற்க
வாய் நிறை சிரிப்பூக்களை
மலர வைக்கவில்லையா நாம் ?

பயணிக்கும் எவரின் பாதங்களுக்கும் பாதையாகவில்லையா திசைகள் ??

வழிமழைத்துளிகளை
வாரியணைக்க முளைபயிர் கூட்டம்
பசுங்கரங்களாகவில்லையா...???

எல்லா பாவாடைக்குள்ளும்
நூல்கள் இல்லையா...????

எழுத்துக்கள் எதையும்
ஏற்கவில்லையா மொழி அரியணைகள்...!?????
பிறகென்ன ,
பாயில் விழுந்து
நோயுள் நுழையும் போது
காலன் ஒதுக்கி காதல் செய்ய
எழுத்துக்களின் ஊர்வலத்தோடு
உலா வரும்
ஒரு கவிதையையாவது எழுதி
வைத்துக் கொள்ளுங்கள்
_கொஞ்சம் பசியின் ருசி உணர்ந்தே.....!!!!!

எழுதியவர் : அகன் (30-May-15, 10:59 pm)
பார்வை : 85

மேலே