விஞ்ஞான விதவை
முற்றுப்புள்ளியில் துவங்கிடும் 
உன் வாழ்க்கை.
முட்கள் படர்ந்து இருக்கும் வேட்கை...
ஊர் முழுக்க ஊர்வலம் !
உண்மையில் நீ தனிமரம் !
உணர்சிகளின் கூடாரம் !
உள்ளங்கையில் ரீங்காரம் !
தெருவோடு பூத்துக்குலுங்கும் 
கறைப்படிந்த பூக்கள்.
கடைக்கேட்டு கரைந்தொழுகும் 
கண்ணீர் கண்ணாடிகள்.
வெருத்துப்பார்க்கும் பார்வைகள் மத்தியில்
 ஓடியாடி விளையாடுகிறாய்.
ஒடுக்க நினைக்கும் ஒருசிலர் முன்பு 
குழந்தைப்போல பேசுகிறாய்.
விடையறியா கேள்விகள்
 உலா வரும் உலகிலே... 
வித்தியாச மங்கை நீ 
விந்தையின் வீம்புனிலே...
தாலியில்லை, தாரமில்லை !
தோல் கொடுக்க தொழனில்லை !
கட்டில் சுகம் கண்டதில்லை !
தொட்டில் சுகம் பார்க்கவில்லை !
கேலி பேசும் கண்கள் முன்பு 
களங்கமில்ல கன்னி நீயோ...
கற்பனைக்கும் எட்டாதிருக்கும் 
விஞ்ஞான விதவை நீயோ...
 
                    

 
                                