ஒரு நள்ளிரவும் இன்னும் ஒரு அதிகாலையும்....
ஆனந்தமாய் உறங்கிட எண்ணி
மெத்தையில் விழுந்து விழிமூடினேன்
உறக்கம் வந்தது
ஓரளவுக்கு........
நினைவலைகள் சுழல்காற்றாய்
சுற்றி அடித்ததில்
விழி உறக்கம் தொலைத்தேன்.....
நள்ளிரவு, நடுசாமம்
எப்படி இருக்குமென
இங்கு வந்து கண்டதில்லை
இன்று கண்டேன்.......
எங்கும் நிலவிகொண்டிருந்த
அமைதியை கலைக்க முயன்றது
என்கால் கொலுசொலி.....
அமைதியும் அழகுதான்
அதனால் சப்திக்கவேண்டாம்
கட்டளை இட்டேன்- என்
கால் கொலுசுக்கு.......
அமைதி
ஆக்கிரமித்து கொண்டது
மீண்டும்.......
அவஸ்தையாய் அடிகடி
நேரம் பார்த்தேன்- உறக்கம்
வருவதாய் இல்லை
சிறிதும்....
ஆதவனுக்கு முன்னமே
எழுந்தால் என்ன?
அடிநெஞ்சில்- ஒரு
சிலீர் மின்னல்......
உள்ளம் குதூகலிக்க
குழந்தையாய் துள்ளி
எழுந்தேன்....
இமயமலை சாரலோ
என்னும்படி- இயற்கை குளிர்காற்று
ஊடுருவியது
என் உள்ளதையும்தான்...
பனிக்கட்டியை போன்று பயமுறுத்தியது
தண்ணீர்- அசரவில்லை
ஆசையோடு மொத்தமாய் நனைத்தேன்
தெப்பமாய்....
ஒற்றை சன்னலின் வழியே
வானத்தையே பார்த்துகொண்டிருந்தேன்
இமை கொட்டாமல்...
இதோ இதுவரை
கருந்திரை விரித்து
மாயஜாலம் காட்டிகொண்டிருந்த
நட்சத்திர கன்னிகளிடம்
ஒரு மாற்றம்,,,,,
ஆதவன் எழுந்து விட்டான்
கீழ்த்திசையில்- ஆனால்
அதற்கு முன்னமே காணவில்லை
நிலவுபெண்ணை .....
கொஞ்சம் கொஞ்சமாய்
கருந்திரை காணாமல்போக
அடிவானில் அழகாய் சிரிக்கிறது
விடிவெள்ளி
போட்டிபோட்டுகொண்டு
புன்னகைத்தேன்
நானும்.....
எந்த நொடியில் இருள் போனது?
அதிகாலை வந்தது?
உற்றுகவனிக்க முடியாமல்
ஆரம்பித்து விட்டது
பறவைகளின் சங்கீதம்
வியப்பில் விழிகள்
விரித்து
நிற்கிறேன்
இன்னமும்.....
ஆம்- இன்று
வானுக்கும் எனக்குமான
உறவு- அது
ஒரு நள்ளிரவும்
இன்னுமொரு அதிகாலையும்....