பூமியே மீண்டும் சுற்றுவாயா

என் கண்களின்
ஒளி கதிரவனின்
ஒளியை மிஞ்சியன.!

என் தேகத்தின் எல்லா
செல்களும் ஒரு நிமிடம்
அதிர்ந்துபோய் நின்றன.!

கால்கள் பூமியை தொட்டும்
தொடாமல் நகர்ந்தன.!

வியர்வை நீர்வீழ்ச்சியாயின.!

மூச்சுக்காற்றின் வெப்பநிலை
நீர்வீழ்ச்சியை வற்றசெய்தன.!

கள்ளப்புன்னகை ஒன்று
வெளியேவர பூவா?தலையா?
போட்டுக்கொண்டது

இதுதான் காதலை
உறுதிபடுத்தும்
இறுதி தேர்வோ.!
என மனசாட்சி கேட்டது.?

ஆம் அவள்
சட்டென்று கொடுத்த
சத்துள்ள முத்தத்தாலே
இவையெல்லாம் நடந்தன.!

பூமியே அந்த நிமிடத்தை
மட்டும் மீண்டும் சுற்றுவாயா..??

எழுதியவர் : பார்த்திப மணி (27-Jun-15, 11:16 pm)
பார்வை : 123

மேலே