நம்பிக்கைகள்
கூச்சல் மட்டுமே கவனம் ஈர்க்கும்-
நம்பி இருந்தேன்
அவள் முகம் காணும் வரை..!!
மனம் கட்ட கயிறு இல்லை-
நம்பி இருந்தேன்
அவள் கை இரண்டும் காணும் வரை..!!
பட்டு மின்னும் சேலை மட்டுமே அழகு-
நம்பி இருந்தேன்
அவள் சுடிதார் அணியக் காணும் வரை..!!
பின்னிய கூந்தல் மட்டுமே அழகு-
நம்பி இருந்தேன்
அவள் கற்றைக் கூந்தல் என் முகம் உரசும் வரை..!!
என்னை கவலைகள் தீண்டத் தகாது
நம்பி இருந்தேன்
அவள் என்னை முறைக்க காணும் வரை..!!
பார்த்ததும் காதல் பிறக்காது-
நம்பி இருந்தேன்
பார்த்ததும் காதல் பிறக்கும்-
இப்போது நம்புகிறேன்..
நம்பிக்கைகள் பொய்ப்பத்தும்..
நம்பாதது மெய்ப்பதும் பல முறை நடக்கலாம்
நம் வாழ்வில்..!
இருந்தும் நம்புகிறேன்..!!
என் நம்பிக்கைகளை.!