உயர உயர பறக்கிறாய்
என் கால்களுக்கு
சக்கரங்கள் கட்டித் தந்து..
வளைந்து வளைந்து
உன்னைப் பின்தொடரச் செய்து விட்டு..
எனக்குத் தெரியாமலே
இரண்டு சிறகுகள் எப்போது வாங்கினாய்..
உல்லாசமாய் உயரப் பறக்கும் உனக்கு..
என்னைத் தெரிகிறதா..
நீ இருக்கும் உயரத்திலிருந்து
பார்க்கையில்..?