நீ வருவாய் என
குழந்தையின் சிரிப்பு,
தாயின் அரவணைப்பு,
தந்தையின் பாசம்,
காதலனின் அன்பு,
காதலியின் முத்தம் ,
கணவனின் காமம்......
இதில் எது உயர்ந்ததென்று எனக்குத் தெரியாது! எனினும்
இவை அனைத்தையும் விட
நான் வாசித்த அழகான கவிதையும் (உன் பெயர்)
நான் சுவாசித்த உன் அன்பும்..
என் நெஞ்சோடு உறைந்து விட்டது..!! இதை
உயர்வா, தாழ்வா என்று பட்டிமன்றம் நடத்தாமல்.. என்
நெஞ்சில் நிறைந்த உன்னை
அனு அனுவாய் ரசித்து ரசித்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.. இருந்தும்
கனவுக்குள் நான் கட்டிய கோட்டை, வெறும்
கல்லறையாய் எழும்பி விட்டது!
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, கை கோர்த்து,
எனக்கு நீயும், உனக்கு நானுமாய் வாழ்வோம் என்று
கனவுக்குள் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடவில்லை நான்;
ஆசைகள் வேறு, நடைமுறை வேறு.. இதை அறிந்தவள் தான் நான்!
நிழல்கள் என்றும் நிஜமாகாது என்பதையும் புரிந்தவள் தான் நான்!! இருந்தும்
உன் கை கோர்த்து, கடல் அலையில் கால் நனைத்து,
உன் தோள் சாய்ந்து, கடற்கரையில் இளைப்பாற ஏங்குகிறேன்!!
காதலுக்கும் காமத்திற்கும் உள்ள இடைவெளி என்னவென்று தெரியாது என்றேன்..
இன்று..
உனக்கும் எனக்கும் இடையில் கூட
ஏன் இந்த இடைவெளி என்று புரியாமல் தவிக்கிறேன்..!!
என்னுள் உன்னை உணரும் நாள்
மிக தொலைவில் இருப்பதாய் நினைத்திருந்தேன்;
உண்மையில் நீ தான் என்னை விட்டு
எங்கோ தொலைவில் சென்று விட்டாய்..!
உன்னை நிலவென்று எட்டி பார்ப்பதா? இல்லை
என் உயிர் என்று தொட்டு பார்ப்பதா? என்று கேட்டேன்.. இன்று
என் உயிர் நீ என்று தொடும் வேளையில்
நிலவென எட்டி நிற்கிறாய்..!
என்னை கட்டி போட்டு காவலனாய் நிற்காதே என்றேன்.. இன்று
என் கட்டவிழ்த்து, காதலனாய் கூட, நீ அருகில் இல்லை..!!
எனை சேராத உன் சுவாச காற்றை
நான் காற்றோடு கலக்கும் முன், என்றாவது
கலந்து விட துடிக்கிறேன்..!!
என் இடை தீண்டாத உன் விரல்களை எண்ணி எண்ணி,
என் விரல் கொண்டு கவிதை தீட்டுகிறேன்..!!
எரிகின்ற தீயை அணைக்க சிறிதளவு தண்ணீர் போதும்; எனினும்
என் உள்ளம் கொண்ட ஏக்கத்தை உன்னால் மட்டுமே அணைக்க முடியும்!
மடை திறந்து ஓடி வரும் வெள்ளம் போல் உன்
அன்பு, பாசம், பரிவு, காதல்
எனும் வெள்ளத்தில் எனை மூழ்கச்செய்தாய்;
எனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து விட்டாயே!!
சிதறிப்போன முத்துக்களாய் உன் சிரிப்பில்,
அன்று தொலைந்து போன என் இதயம்,
இன்று சில்லு சில்லாய் உடைந்துவிட்டது!!
உடைந்தது என் இதயம் மட்டும் தான்.. அதில்
உன் பிம்பம் மட்டும் என்றும் அழியாமல்
என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும்!
நான் மண்ணோடு மண்ணாக மடிந்த பின்னும்!!!!!
காத்திருக்கும் என் கண்கள்..
நீ வருவாய் என.. அது வரை,
தொடரும் என் காதல்.............