மனம் ஒரு மாதவம்

படைத்த கடவுளும் அறியாதது
மனிதனின் மனம்
வளரும் சூழ்நிலைக்கேற்ப
மாறிவிடும் மனத்தினுள்
நல்லதும் கெட்டதும் கலந்து விடும்

என்ணங்களின்
அசைவும் விசைவும் அறியாது
பாதிப்பு நிகழ்ந்துவிட்டபின்தான்
தெரியவரும் மனநிலா
கறை கொண்டதென்று.

வாழ் நாளில் காட்சிகள்
மாறுவது மனக்கிலேசங்களால் - இதனை
அறியாமலே அலை பாயும், ஆர்ப்பரிக்கும்
சிந்தையில் வசப்படும், வசைபாடும்.

கலங்கி தெளியும் ஆற்றுப்படுகை போல
விளங்கி புரியும் போது தான்
சுயம் புரியும் சூத்திரம் அறியும்

தத்தித் தாவும் மனத்தை ஆளுமை கொண்டாலே
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!

எழுதியவர் : (3-Aug-15, 12:49 am)
பார்வை : 79

மேலே