காதல்
ஒரு பொண்ணு தினமும் கல்லூரியில் இருந்து வரும்போது ஒருத்தன் பின்னாடியே வருவதை கவனித்தாள்.
வீட்டுக்குள்ள போயி ட்ரஸ் மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன் அங்கேயே நின்று செல்போன நோண்டிக்கிட்டு இருந்தான்.
ஒருவாரம் ஆன பிறகும் தினமும் இதே கதை தொடர்ந்தது.
"அம்மா அப்பாவிடம் சொல்லி விடலாமா?"
கொஞ்சம் பொறுத்துப் பாப்போம். ஒரு மாசம் தாண்டிருச்சு...
கதை ரிப்பீட்டு...
பையன் நல்லா இருக்கான். வீட்டுல சொல்லிக் கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம் .
நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை, குடும்ப விபரம் எல்லாம் கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம் தாண்டிருச்சு.
ஊர்லேர்ந்து பெரியவங்களக்கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்போக ரெடியானாங்க....
பொண்ணு அவன் கிட்டப் போயி "ஒரு வருஷத்துக்கு மேலா என்ன பாலோ பண்ணுறீங்க. சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க. ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான விஷயமெல்லாம் பண்ணலை. அதுனால நான் வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க. ஐ லவ் யூ"
"அடாடா... நான் உங்க வீட்டு வாசல்ல உங்களுக்காகக்
நிக்கலை.. உங்க வீட்டு விபி ல நீங்க பாஸ் வேர்டு போடலை...
அதுனால ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன். நான்
உங்களை லவ் பண்ணல. சாரி..

