‎உணவே_மருந்து‬

எனக்கு இரவு சாப்பாடுதான் சென்னையில் ப்ரச்சனை என்று புலம்பினான் ஒரு இளையவன்.

ஹோட்டலில் இட்லி இலையில் கிடைக்குமிடத்தில் வாங்கு...... சட்னி சாம்பாரைத் தொடாதே.......

வாங்கிய இட்லியில் பருப்புப் பொடி வித் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்து பிசைந்து சாப்பிடு ......

தூங்கச் செல்லும் முன் ஒரு பூவன் பழம் சாப்பிட்டுப் படு ........ தேவையற்ற வியாக்கனாங்களை வளர்த்துக் கொள்ளாதே என்று சொல்லி விடைபெற்றேன்......

செலவு குறைவான அதே நேரத்தில் கொஞ்சம் போல் ஆரோக்கியமான உணவிது ( வழியற்ற நாட்களில்)

பசிக்கு சாப்பிடுவது மட்டுமே உத்தமம்......

ருசிக்குச் சாப்பிடுபவர்கள் எனில் “அப்போலோ ஆஸ்பிடல் “ ஷேரில் முதலீடு செய்து விட்டு , வேணுங்கறதை சாப்பிடுங்க.......என்றேன்.

பயல் மெர்சலாயிட்டான்......

சுவர் இருந்தால்தான் சித்திரம் ..... வயிற்றுக்கு இதமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்......

எழுதியவர் : முகநூலில் - படித்தது பகிர் (14-Sep-15, 12:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 107

மேலே