புல்லாங்குழல்

புல்லாங்குழல்

நன்றி ;ஜெயராஜன் -ஓஷோ கதைகள்

மோசசிடம் ஒரு புல்லாங்குழல் இருந்தது.சில சமயம் அதை வாசிக்க அவர் மலைக்கு செல்வதுண்டு.அவர் வாசிப்பை அவ்வழியில் செல்லும் இடையர்கள் மெய்மறந்து கேட்பர்.மான்கள் அசையாது நிற்கும்.பறவைகள் அவரை சூழ்ந்து கொள்ளும்.மோசஸ் இறந்த பிறகு அவ்விடையர்கள் அந்தப் புல்லாங்குழலை ஒரு மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர்.ஓரிரு தலைமுறைக்குப்பின் மக்கள்,''இந்த மூங்கில் புல்லாங்குழலில் என்ன இருக்கிறது?.வழிபடுவதற்கு இது மேலும் சிறப்புள்ளதாக இருக்க வேண்டும்.''என்று கூறி அதைத் தங்கத்தால் அலங்கரித்தனர்.

அடுத்து வந்த மக்கள் அதை வைரத்தால் அலங்கரித்தனர்.சில ஆண்டுகள் கழித்து ஒரு சங்கீதக் கலைஞர் அவ்வழியே வந்தார்.அவர் மோசசின் புல்லாங்குழல் பற்றிக் கேள்விப்பட்டு ஆவலுடன் அதைப் பார்க்க வந்தார்.தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் புல்லாங்குழலை கையில் எடுத்துப் பார்த்தார்.பின் அதை ஊதிப் பார்த்தார்.அதன் துளைகள் முழுவதும் அடைபட்டிருந்தன.
மகாவீரரின் புல்லாங்குழலும்,புத்தரின் புல்லாங்குழலும்,இயேசுவின் புல்லாங்குழலும் இப்படித்தான் மாற்றப்பட்டு விட்டன.அவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை அழகற்றவை ஆக்கி விட்டனர்.இதற்கு மகா வீரரோ,புத்தரோ ஏசுவோ பொறுப்பல்ல.நாமே காரணம்.

நன்றி ;ஜெயராஜன் -ஓஷோ கதைகள்

எழுதியவர் : ஓஷோ கதைகள் (16-Sep-15, 2:14 pm)
Tanglish : pullangulal
பார்வை : 81

மேலே