ஹோம் வொர்க்

சிரிக்க மட்டும்.....

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....

டீச்சர் : ஏன் முடியல ????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது....

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர் .... குளிக்கலல்ல.... எப்பிடிப் போறது?

டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல....

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் ... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு....

டீச்சர் : ?????????????

எழுதியவர் : செல்வமணி (28-Sep-15, 8:14 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 276

மேலே